ஏப்ரல் 20 முதல் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை



ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் வழமையான ஒழுங்கில் செயற்படும். 
கொழும்பு மாவட்டத்தின் உள்ளே அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் 50 வீதமான ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். அனைத்து அரச நிறுவனங்களிலும் பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் வீட்டிலிருந்து தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும். 
ஒவ்வொரு நிறுவனத்திலும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் யார் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். 
ஒரு நாளில் பணிக்கு சமூகமளிக்கும் முன்றில் ஒரு பகுதியினர் மற்றும் 50 வீதமானவர்களுக்கு பதிலாக அடுத்த நாளில் வேறு பிரிவினரை தெரிவுசெய்வதற்கு நிறுவனத் தலைவர்களுக்கு முடியும். 
அலுவலகங்களை திறந்து நடத்திச் செல்லுகின்ற போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தேவையான வசதிகளை வழங்குவது நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும்.
(அ.த.தி)

ஏப்ரல் 20 முதல் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை ஏப்ரல் 20 முதல் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.