உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம்



Covid-19 ன் அறிகுறிகளான இருமல், தடிமன் மற்றும் சுவாசப் பிரச்சினை இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம் என சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவைகள் அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறான நோய் குணங்குறிகள் காணப்படுமாயின் 1390 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு 

அல்லது சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் சுவசெரிய வின் 1990 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு அறிவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 
பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு யாராவது ஒருவருக்கு நோய் நிலைமை காணப்படுமாயின் அந்த நோய் மற்றவருக்கு பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த உடனடி தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் மருத்துவ ஆலோசனைகளை பெற முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம் Reviewed by irumbuthirai on April 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.