கொரோனா அபாயம் நீங்கிவிட்டதா? அரசின் அறிவிப்பு



கொரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை என அரசு நேற்று (18) அறிவித்துள்ளது. எனவே வைரஸ் பரவுவதற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடனும் பொறுமையாகவும் செயற்படுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொழிலுக்காக சென்றுவருவதை தவிர வேறு சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்துகொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியவுடன் தேவையற்ற பதற்றத்துடன் பெருமளவில் ஒன்றுகூடும் வகையில் வர்த்தக நிலையங்களில் ஒன்றுகூட வேண்டாம் என்றும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சினையை முழுமையாக ஒழித்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடும் வரை தம்முடையவும் பிள்ளைகளுடையவும், தேசத்தினதும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அனைத்து கஷ்டங்களையும் பொறுப்புடன் சகித்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 
(அ.த.தி.)


கொரோனா அபாயம் நீங்கிவிட்டதா? அரசின் அறிவிப்பு கொரோனா அபாயம் நீங்கிவிட்டதா? அரசின் அறிவிப்பு Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.