அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களினதும் சேவைகள் மீண்டும் அறிவிக்கும் வரை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து அரிசி ஆலைகளினதும் உரிமையாளர்கள் தாம் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் நெல்லை அரிசியாக மாற்ற வேண்டும்.
சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தமது பிரதேச செயலாளர் பிரிவினுள்ளும், நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் மாவட்ட எல்லையினுள்ளும், பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியிலும் அரிசியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர அவர்கள் பதில் பொலிஸ் மா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், உணவு ஆணையாளர் நாயகம் மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
தற்போது சுமார் 3 மில்லியன் மெட்ரிக் டொன் நெல் அறுவடை கிடைக்கப்பெற்றுள்ளது. அவற்றில் 2/3 பகுதி அரிசியாக உள்ளது. எனினும் அதிகளவு அரிசியின் விலையை அதிகரிப்பது அல்லது அரிசி விநியோகம் குறைவடைவது நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான பாதுகாப்புக்கு அதிக இடர் நிலைமையை தோற்றுவிப்பதாக அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
சகல நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாகின...
Reviewed by irumbuthirai
on
April 10, 2020
Rating:
No comments: