கொரோனாவால் வபாத்தானவரின் ஜனாஸா தொழுகை (படங்கள்)



கொரோனா வைரஸ் தொற்று (Covid-19) காரணமாக இலங்கையில் இடம்பெற்ற மூன்றாவது மரணம் மரதானையைச் சேர்ந்த நபராகும். இவரது ஜனாஸா தொழுகைக்காக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. Covid-19 இனால் மரணிக்கும் முஸ்லிம்களை எரிக்க வேண்டாம் எனவும் உலக சுகாதார ஸ்தாபன விதிமுறைகளுக்கமைய புதைக்கிறோம் என பல்வேறு முஸ்லிம் தரப்புகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டும் அது நிறைவேற்றப்படவில்லை. 
இதன் சாத்தியப்பாடுகள் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் தொடர்கின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டும் முடிவுகள் எட்டப்படவில்லை. இருப்பினும் இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தொழிநுட்பக் குழுவை நியமிப்பதென இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 
தமது இறுதிக்கிரியைகள் இவ்வாறு நடந்துவிடக்கூடாது என நினைப்பவர்கள் நோயை மறைக்கலாம் எனவும் அதற்கிடையில் இது பலருக்கும் பரவும் அபாய நிலை உருவாகும் எனவும் ஆகவே அரசாங்கம் சாதக பதிலையளித்தால் இது தொடர்பில் ஏற்படும் பயங்கர நிலையை தவிர்க்கலாம் எனவும் மேற்படி கூட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
குறித்த ஜனாஸா தொழுகை தொடர்பான படங்களை கீழே காணலாம்.












கொரோனாவால் வபாத்தானவரின் ஜனாஸா தொழுகை (படங்கள்) கொரோனாவால் வபாத்தானவரின் ஜனாஸா தொழுகை (படங்கள்) Reviewed by irumbuthirai on April 04, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.