அரச-தனியார் போக்குவரத்து சேவைகளில் இன்று (13) முதல் ஏற்படும் மாற்றங்கள்


அரச-தனியார் போக்குவரத்து சேவைகளில் இன்று முதல் (13) பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஊரடங்கு உத்தரவு அமுலாகும் கொழும்பு கம்பஹா மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் அரச-தனியார் பஸ் வண்டிகளிலும், ரயில் வண்டிகளிலும் இன்று முதல் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகள் பயணிக்க அனுமதி வழங்கப்படவுள்ளது. 
இது தொடர்பாக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிக்கையில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்றார். அநாவசியமான பயணங்களைத் பொது மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 
நேற்று போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இன்னும் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது..

கடமைக்குத் திரும்பும் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கி போக்குவரத்துச் சேவைகளை நடத்த முடியும். 
பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவைகளில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் சேவைகள் மட்டுப்படுத்தப்படும். 
13ம் திகதி தொடக்கம் ரயில் பயணிகளுக்கு அனுமதிப் பத்திரங்களும், பருவச் சீட்டுக்களும் விநியோகிக்கப்படும். அனுமதிப் பத்திரம் பெறும் பயணிகள் தமது நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள ஆள் அடையாள அட்டையை சமர்ப்பிப்பது கட்டாயமானது. 
பயணிகள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசங்களை அணிய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அரச-தனியார் போக்குவரத்து சேவைகளில் இன்று (13) முதல் ஏற்படும் மாற்றங்கள் அரச-தனியார் போக்குவரத்து சேவைகளில் இன்று (13) முதல் ஏற்படும் மாற்றங்கள் Reviewed by irumbuthirai on May 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.