கொவிட்-19: அரச, தனியார் பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள், பிரிவெனாக்கள் எவ்வாறு தயார்படுத்த வேண்டும்? (தமிழ், சிங்கள சுற்றுநிருபங்கள் இணைப்பு)
அரச மற்றும் தனியார் பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கு எவ்வாறு தயார்படுத்த வேண்டுமென கல்வயமைச்சு 11-05-2020 திகதியிடப்பட்ட 15/2020 இலக்கம் கொண்ட சுற்றுநிருபத்தை வெளியிட்டுள்ளது.
அதில்,
பாடசாலை / நிறுவனங்களை ஆரம்பிக்க முன்னர் செய்ய வேண்டியவை ஆரம்பித்த பின்னர் செய்ய வேண்டியவை போன்றன தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
இதுமாத்திரமன்றி...
சுகாதார மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்க வேண்டும்.
சகல சந்தர்ப்பங்களிலும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைய செயற்படல்.
அந்தந்த பிரதேச நிலைமைகள், மாணவர் எண்ணிக்கைக்கு அமைய படிமுறையாக பாடசாலை ஆரம்பிக்கப்படும்.
குறித்த பணிகளுக்கான பணத்தை பா.அ.சங்க கணக்கில் இதுவரை பாவிக்காத கருத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை பயன்படுத்தல்.
விஷேட நிலைமைகளில் 1390ற்கு அழைத்து ஆலோசனைகளைப் பெறல்.
உட்பட இன்னும் பல விடையங்கள் கூறப்பட்டுள்ளன.
சுற்றுநிருபத்தை தமிழில் முழுமையாகப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க
சுற்றுநிருபத்தை சிங்களத்தில் முழுமையாகப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
கொவிட்-19: அரச, தனியார் பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள், பிரிவெனாக்கள் எவ்வாறு தயார்படுத்த வேண்டும்? (தமிழ், சிங்கள சுற்றுநிருபங்கள் இணைப்பு)
Reviewed by irumbuthirai
on
May 13, 2020
Rating:
No comments: