ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடுபூராகவும் முழுநாளும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
ஜூன் 1 திங்கள் தொடக்கம் ஜூன் 3 புதன் வரை எல்லா மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது முன்னரைப் போன்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையாகும்.
ஜூன் 4, 5 ஆகிய இரு தினங்களிலும் நாடுபூராகவும் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
ஜூன் 6 சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவது முன்னரைப் போன்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையாகும்.
கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி உண்டு.
(நிவ்ஸ்வய)
ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (28.05.2020)
Reviewed by irumbuthirai
on
May 28, 2020
Rating:
No comments: