வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 61 ஆக அதிகரிக்க தீர்மானம்



அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது நேற்று நடைபெற்ற அமைச்சரவையின் கூட்டத்தில் வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை இவ்வாறு அதிகரிக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண தெரிவித்தார். 
இது தொடர்பான அமைச்சரவை முடிவு வருமாறு:
கௌரவ சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை வருடம் 60 தொடக்கம் 61 ஆக நீடித்தல். இதன் போது, அதிமேதகு ஜனாதிபதியினால் வைத்திய சேவைக்கு மேலதிகமாக , சேவையின் அடிப்படையில் அனைத்து தொழில்நுட்ப துறையை உள்ளடக்கிய வகையில் இந்த ஓய்வுபெறும் வயதை தீர்மானிப்பதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு பரிந்துரைத்தார்.

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 61 ஆக அதிகரிக்க தீர்மானம் வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 61 ஆக அதிகரிக்க தீர்மானம் Reviewed by irumbuthirai on May 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.