மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் முறை தொடர்பாக அமைச்சரின் விளக்கம்



மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் முறை தொடர்பாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும விளக்கமளித்துள்ளார். அதாவது கட்டங்கட்டமாகவே இது ஆரம்பிக்கப்படும். இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர், 
உள்ளுராட்சி மன்றங்களின் உதவியுடன் சகல பாடசாலைகளும் தொற்று நீக்கம் செய்யப்படும். அதன் பின்னர் சுகாதார துறையின் ஆலோசனைக்கமைய 4 நாட்களின் பின்னரே ஏனைய கருமங்கள் மேற்கொள்ளப்படும். அதில் முதல் கட்டமாக அதிபர் ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு வரவழைத்து நேரசூசி தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும். இரண்டாம் கட்டமாக 

சா.தர மற்றும் உ.தர மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். அதற்கு அடுத்த கட்டத்தில்தால் ஏனைய மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
பாடசாலை ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் எதிர்வரும் வாரத்தில்தான் தீர்மானிக்கப்படும். இதமாத்திரமன்றி பாடசாலைக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும்படி அதிபர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார். இதற்காக வெப்பமானிகள் பாடசாலைக்கு வழங்கிவைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 
மாத்தறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இந்த விளக்கங்களை வழங்கினார்.

மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் முறை தொடர்பாக அமைச்சரின் விளக்கம் மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் முறை தொடர்பாக அமைச்சரின் விளக்கம் Reviewed by irumbuthirai on May 10, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.