வட கொரியா தலைவருக்கு எந்த அறுவை சிகிச்சையும் நடக்கவில்லை


நேற்று புதன்கிழமையன்று தென் கொரிய நாடாளுமன்ற குழுவிடம் பேசியுள்ளார் அந்நாட்டு புலனாய்வு அமைப்பின் தலைவர் சுன் ஹுன். அப்போது வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்து வெளியான வதந்திகளில் உண்மை இருப்பதுபோல தெரியவில்லை என்று அவர் கூறியதாக தென் கொரிய செய்தி நிறுவனமான யொன்ஹாப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வருடம் தொடங்கியதில் இருந்து இதுவரை 17 முறை கிம் ஜாங் உன் பொது வெளியில் காணப்பட்டதும் தெரிய வந்துள்ளது. வழக்கமாக இந்த நேரத்திற்கு அவர் 50 முறை 

வெளியில் காணப்பட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி கூட்டங்கள், ராணுவப்படைகள் போன்ற உள்நாட்டு விவகாரங்களை ஒருங்கிணைப்பதில் கிம் ஜாங் உன் கவனம் செலுத்தி வந்தார். கொரோனா தொற்று பரவல் குறித்த கவலை எழுந்துள்ளதால், அவர் வெளியில் வருவதை குறைத்திருக்கலாம்" என நாடாளுமன்ற கமிட்டியின் உறுப்பினர் கிம் ப்யுங் கீ தெரிவித்தார்.
கிம் ஏற்கனவே இறந்துவிட்டார் என செய்திகள் பரவியதும் ஆனால் சில தினங்களுக்கு முன் கிம் வடகொரிய உரத் தொழிற்சாலையொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
வட கொரியா தலைவருக்கு எந்த அறுவை சிகிச்சையும் நடக்கவில்லை வட கொரியா தலைவருக்கு எந்த அறுவை சிகிச்சையும் நடக்கவில்லை Reviewed by irumbuthirai on May 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.