கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கத்திற்கு ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் திட்டமானது முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையிருக்கு பொருத்தமற்றது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள திதி நெருக்கடிகளை சமாளிக்க அமைச்சின் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து அரைச் சம்பளம், வார சம்பளம் அல்லது மே மாதத்தின் ஒரு நாள் சம்பளத்தை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கோரி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
முப்படையினர் மற்றும் பொலிஸாரிடமிருந்து ஒரு நாள் சம்பளத்தை வழங்கமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களில்
வெளியான கருத்துக்களை முற்றாக மறுத்த மேஜர் ஜெனரல் குணரத்ன, நன்கொடை வழங்கும் இந்த கோரிக்கை இராணுவ, கடற்படை, விமானப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் படையினருக்கு
அவசியமற்றது என உறுதிப்படுத்தினார்.
(அ.த.தி)
முப்படை மற்றும் பொலிஸாரும் தமது சம்பளத்திலிருந்து நன்கொடை வழங்க வேண்டுமா?
Reviewed by irumbuthirai
on
May 18, 2020
Rating:
No comments: