தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வோரை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் நாளை 20 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அனைத்து மாகாண மற்றும் மாவட்ட செயலகங்களில் பதிவுசெய்துகொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக தென் கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லும் எதிர்பார்ப்புடன் உள்ளவர்கள் பதிவு செய்யப்படவுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கான பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும்
நாட்களில் ஆரம்பிக்கப்படும் எனவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று காரணமாக வெளிநாடுகளில் தொழில்புரிவதற்கு செல்வோரை பதிவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த மாதம் 13 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வோரை பதிவு செய்தல் மீள ஆரம்பம்..
Reviewed by irumbuthirai
on
May 19, 2020
Rating:
No comments: