உயர்கல்விக்கான வட்டியில்லா கடன்: நீடிக்கப்பட்ட விண்ணப்ப முடிவு திகதி:


2016 , 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் கல்வி கா.பொ.தராதர (உ/த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கைநெறிகளை தொடர்வதற்காக உயர்கல்வி , தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சினால்  மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 4ஆவது தொகுதி மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக இணையதளம் மூலம்


விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன். இதற்கான இறுதி தினமாக 2020.03.23 திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக இதன் இறுதி தினம் காலவரையறையின்றி நீடிக்கப்பட்டுள்ளது. உயர் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் இதன் இறுதி திகதி 2020 மே மாதம் 20ஆம் திகதி என மாணவர் கடன் பிரிவு தெரிவித்திருந்தததை இதன் மூலம் அறியத்தருகின்றோம். 
இந்த விண்ணப்பத்தாரர்களுக்கான நேர்முகப் பரீட்சை நடவடிக்கைகள் தற்பொழுது நாட்டில் நிலவும் கொவிட் 19 தொற்று நிலையை கவனத்தில் கொண்டு மென்பொருள் மூலம் 2020 ஜுன் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான முழுமையான விபரங்கள் விண்ணப்பத்தாரர்களின் மின்னஞ்சல் முகவரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளன என்று உயர்கல்வி அமைச்சு தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(அ.த.தி)

உயர்கல்விக்கான வட்டியில்லா கடன்: நீடிக்கப்பட்ட விண்ணப்ப முடிவு திகதி: உயர்கல்விக்கான வட்டியில்லா கடன்: நீடிக்கப்பட்ட விண்ணப்ப முடிவு திகதி: Reviewed by irumbuthirai on May 16, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.