கொரோனாவுக்காக போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட 21 மாவட்டங்களில் இடம்பெற்ற விற்பனையில் சீனி மற்றும் ஈஸ்ட் ஆகக்கூடுதலாக விற்பனையாகியிருப்பதாக கலால் பிரிவினர் மற்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது சாராயம் முதலியவற்றைப் புளிக்கச் செய்யப் பயன்படுகின்மை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத மது பான தயாரிப்புக்காக சீனி மற்றும்
ஈஸ்ட் பெருமளவில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கலால் திணைக்கள பிரதி ஆணையாளர் கபில குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இக்காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களில் பழுப்பு சீனி கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை சட்ட விரோத மதுபான உற்பத்தியை முற்றுகையிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1022 முற்றுகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
ஆகக்கூடுதலாக விற்பனையான பொருட்கள்.... காரணம் இதுதான்....
Reviewed by irumbuthirai
on
May 03, 2020
Rating:
No comments: