அரச ஊழியர்களுக்காக பல இலவச கற்கை நெறிகள்



அரச துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்காக பல இலவசமாக கற்கை நெறிகள் அரச ஈ கற்பித்தல் GeLP கட்டமைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இலங்கை அரச அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்துடன் இணைந்து இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 
இணையதளத்தினூடாக இந்த கற்கை நெறிகளுக்காக பதிவு செய்ய முடியும். இதுவரையில் 2000 இற்கும் மேற்பட்ட 

அரச அதிகாரிகள் இந்த கற்கை நெறி கட்டமைப்புக்குள் பதிவு செய்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் GeLP மூலம் வழங்கப்படும் கற்கைநெறியை இலவசமாக தொடர முடியும். 
மேலதிக விபரங்களை www.gelp.gov.lk என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்று இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது.
(அ.த.தி)


அரச ஊழியர்களுக்காக பல இலவச கற்கை நெறிகள் அரச ஊழியர்களுக்காக பல இலவச கற்கை நெறிகள் Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.