ஐக்கிய இராச்சியத்தில் த கார்டியன் செய்திப் பத்திரிகையின் இணையத்தளப் பதிப்பில் 2020 மே 15 ஆந் திகதி வெளியிடப்பட்ட 'சுற்றுலா வினா விடைப் போட்டி: ஃப்ரைடே மேன், உங்கள் தீவுகளை உங்களுக்குத் தெரியுமா?' எனத் தலைப்பிடப்பட்ட வினா விடைப் போட்டி தொடர்பில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு கவனம் செலுத்துகின்றது.
இதில் இரண்டாவது வினா, 'ஈழம் என்பது எந்தப் பிரபலமான விடுமுறைத் தீவின் பூர்வீகப் பெயர்?' எனும் வகையில் வினவுவதாக அமைந்துள்ளது. இந்த வினாவிற்கான பதில் தெரிவுகளில் ஒன்றாக இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், ஒருவர் இலங்கையை பதிலாகத் தேர்ந்தெடுத்து, அதை சரியான பதிலாகக் குறிப்பிடுகையில், 'இந்தத் தீவின் அண்மைய இராணுவக் கிளர்ச்சியின் முழுப் பெயர் எல்.ரீ.ரீ.ஈ. - தமிழீழ விடுதலைப் புலிகள்' எனும் மேலதிக விளக்கம் தோன்றுகின்றது.
இந்தத் தகவலின் தவறான தன்மை காரணமாக அதனை நீக்குமாறு கோரிக்கை விடுத்து ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் சரோஜா சிரிசேன எழுதிய கடிதத்தில் புலிகள் அமைப்பு தமது தனி நாட்டுக் கோரிக்கைக்காக பயன்படுத்திய வார்த்தையே ஈழம் என்பது மற்றப்படி அது எச்சந்தர்ப்பத்திலும் இலங்கையின் பழைய பெயராக பயன்படுத்தப்படவில்லை என்று எழுதியுள்ளார்.இதையடுத்து குறித்த பத்திரிகை அதை நீக்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஈழம் என்ற வார்த்தை.... சரோஜா சிரிசேன எடுத்த நடவடிக்கை ...
Reviewed by irumbuthirai
on
May 18, 2020
Rating:
No comments: