பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டும். பல்கலைக்கழக கல்வி பற்றி எத்தகைய வியாக்கியானங்கள் இருந்த போதும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் இளைஞர் யுவதிகளுக்கு தொழிலொன்றை தேடிக்கொள்ள முடியாதாயின் அது சரியான கல்வி முறையாக இருக்க முடியாது. பட்டதாரிகள் தொழில் கேட்டு ஊர்வலம் செல்வதற்கு பதிலாக
தொழில்கள் அவர்களை தேடி வரும் கல்வி முறைமையே தேவையாகும் என்று ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.
நேற்று (15) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.
வெளிநாடுகளில் கல்வி கற்றுவந்த ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்களை கொவிட் நோய்த்தொற்று பரவலுடன் நாட்டுக்கு அழைத்து வர வேண்டியிருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், இவ்வளவு அதிகமான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது நல்ல அறிகுறியல்ல என்றும் குறிப்பிட்டார். ' இவர்களது கல்விக்காக அதிகளவு அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்கு செல்கின்றது.
பிள்ளைகள் தம்மை விட்டும் தூரமாகியிருப்பது பெற்றோருக்கு அழுத்தத்தை தருவதாக உள்ளது. இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் பல்கலைக்கழக கல்வி பல்வகைப்படுத்தப்பட வேண்டும்.
தொடர்பாடல் தொழிநுட்பம் உள்ளிட்ட புதிய தொழிநுட்ப அறிவு, தாதி தொழில், சுற்றுலா, ஆசிரியர் தொழில் போன்ற துறைகளில் பட்டப் பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்' என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
தொழில்கள்தான் பட்டதாரிகளைத் தேடி வரவேண்டும்... உபவேந்தர்களுக்கு ஜனாதிபதியின் ஆலோசனை...
Reviewed by irumbuthirai
on
May 16, 2020
Rating:
No comments: