மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயல் முறை திட்டத்தை வகுப்பது தொடர்பாக மாகாண மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் எச். எம் சித்ரானந்த கருத்து தெரிவிக்கையில்,
இந்த விடயம் தொடர்பில் தெற்கு, வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாண கல்வி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்திருப்பதாக தெரிவித்தார். ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாண அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்த செயலாளர் அதன் பின்னர் பாடசாலைகளுக்கான விசேட நேர அட்டவணை தயாரிக்கப்படும் என்றார். முதல் கட்டத்தில் தரம் 10 வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு
கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும். இதனைத்தொடர்ந்து தரம் 13; வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஆரம்பி திட்டமிடப்பட்டுள்ளது என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
பாடசாலைகளுக்கான விஷேட நேர அட்டவணை...
Reviewed by irumbuthirai
on
May 04, 2020
Rating:
No comments: