Covid-19 க்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்தது பாடசாலைகளை மூடியே... அதனை முடிவுக்கு கொண்டு வருவது பாடசாலைகளை திறந்தே... என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற
சந்திப்பிலே பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு நாடு வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையிலே நாட்டின் நிலைமைகளையும் பொது போக்குவரத்து நிலைமையையும் ஒரு வாரமாவது அவதானிக்க வேண்டும். மறுபுறத்தில் பாடசாலைகளுக்கு சுகாதார வசதிகளை செய்து கொடுக்க வேண்டியும் இருக்கிறது.
எனவே பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் தினத்தை இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களிலேயே தீர்மானிக்கலாம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலைகளை மூடி ஆரம்பித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது பாடசாலைகளை திறந்தே - கல்வி அமைச்சர்
Reviewed by irumbuthirai
on
May 26, 2020
Rating:
No comments: