PCR பரிசோதனைகள் தொடர்பான விமர்சனங்களுக்கு சுகாதார சேவை பணிப்பாளரின் பதில்


சுகாதார அமைச்சு தவிர்ந்த வெளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிசிஆர் பரிசோதனைகள் தரமற்றவையென மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் குறித்து கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ,இவ்வாறு தற்போது பிரசாரங்களை மேற்கொள்பவர்களே முன்பு அதற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் கற்கை பீடங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுமாறு கோரியிருந்தனர்.
பிசிஆர் பரிசோதனையா- அல்லது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளா? எது மிக முக்கியமென பார்க்கும்போது தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மிக முக்கியமானதும் அவசியமுமாகிறது. தனிமைப்படுத்தலுக்குப் பின்னரும் கூட பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளலாம். எனினும் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கு தனிமைப்படுத்தல் மிக முக்கியமாகிறது என்றும் அவர் தெரிவித்தார். எவ்வாறெனினும் பரிசோதனைக்கூடங்கள் தற்போது விரிவாக்கப்பட்டு பரிசோதனைகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு நிறுவனங்கள் 

ஏற்கனவே பரிசோதனைகளை முன்னெடுத்த போதும் கொரோனா வைரஸ் தொடர்பான பிசிஆர் பரிசோதனை தொடர்பில் அவர்களுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளது. 
அதேவேளை இத்தகைய பரிசோதனை கூடங்கள் ஆரம்பிக்கப்படும் முன்பே அது தொடர்பான மதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது. நாம் அதற்கு மேலதிகமாக தற்போது மேற்படி பரிசோதனைக் கூடங்கள் தொடர்பில் மேலும் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். 
அதனையடுத்து நாம் பேராசிரியர் மலிக் பீரிசின் ஒத்துழைப்புடன் சகல பரிசோதனைக் கூடங்களையும் தனித் தனியாக தரப்படுத்தலுக்கு உட்படுத்த உள்ளோம். அதேபோன்று எமது நீண்ட கால வேலைத்திட்டமாக உலக சுகாதார அமைப்பின் மூலம் அவற்றை தரநிர்யம் செய்வதற்கு உத்தேசித்துள்ளோம். எவ்வாறாயினும் காலத்துக் காலம் பொருத்தமான வகையில் அவற்றை கண்காணிப்புக்கு உட்படுத்துவது இடம் பெறும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

PCR பரிசோதனைகள் தொடர்பான விமர்சனங்களுக்கு சுகாதார சேவை பணிப்பாளரின் பதில் PCR பரிசோதனைகள் தொடர்பான விமர்சனங்களுக்கு சுகாதார சேவை பணிப்பாளரின் பதில் Reviewed by irumbuthirai on May 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.