இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலே உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை போன்றவற்றுக்கான திகதிகளும் அது தொடர்பான ஏனைய விடயங்களும் கூறப்பட்டன.
அந்த வகையில் உயர்தரப்பரீட்சை செப்டம்பர் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2ஆம் திகதி வரையும் புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 13 ஆம் திகதியும் இடம்பெறும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவிக்கையில் , இம்முறை கணக்கீடு உட்பட 5 பாடங்களுக்கு சாதாரண கணிப்பான் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் இன்னும் சில பாடங்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால் சாதாரண தரப் பரீட்சைக்கு கணிப்பான் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அவர் தெரிவித்தார்.
அத்துடன் பரீட்சை நடத்துவது தொடர்பாக சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். தற்பொழுது அதாவது வழமையாக பின்பற்றப்படும் முறையானது சமூக இடைவெளிக்குப் போதுமானது என அவர்கள் தெரிவித்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
2020 உ. தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள்
Reviewed by irumbuthirai
on
June 09, 2020
Rating:
No comments: