கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது. அவிபாவிர் (favipiravir) என்ற இந்த மருந்து அந்நாட்டின பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்ய அரசின் 50 சதவிகித முதலீடு உள்ள கெம்ரர் என்ற நிறுவனம் இந்த புதிய மருந்தை உற்பத்தி செய்துள்ளது.
இந்த மருந்துக்கு ரஷ்ய சுகாதார அமைச்சகம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. மாதம் தோறும் 60இ000 பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும்இ 10 நாடுகள் இந்த மருந்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத் சபை தெரிவித்துள்ளது.
அ.த.தி.
கொரோனாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மருந்து
Reviewed by irumbuthirai
on
June 13, 2020
Rating:
No comments: