தபால் மூலம் இடம்பெற்ற கிளினிக் மருந்து விநியோகம் இடைநிறுத்தம்!


அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை (கிளினிக்) மருந்து மற்றும் அரச ஒசுசல மூலம் பெற்றுக்கொள்ளப்படும் மருந்துவகைகளின் உரிமைமயாளர்களுக்கு தபால் திணைக்கள அலுவலக பணியாளர் மூலம் விநியோகிக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார். 
 கொரோனா வைரசு தொற்றுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி செயலணிக்குழுவின் கோரிக்கையின் அடிப்படையில் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை (கிளினிக்) மருந்து மற்றும் அரச ஒசுசலவின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் மருந்து வகைகளின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி தபால் திணைக்களக்தினால் பொறுப்பேற்கப்பட்டிருந்ததுடன், 
இந்த பணியை எமது பணியாளர் சபையினால் செயல்திறனுடனும் நம்பிக்கையுடனும் நிறைவேற்றப்பட்டதுடன் அதற்காக அர்ப்பணித்த தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர் சபைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். 
இதுவரையில் அரசாங்கத்தினால் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தி பொது மக்களின் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பின்னணியில் தபால் திணைக்களம் வழமை நிலைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தபால் திணைக்களத்தின் வழமையான கடமைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள தேர்தல் பணிகளுக்காக முக்கியத்தவம் வழங்க வேண்டும் என்பதினால் தொடர்ந்தும் அரசாங்க வைத்தியசாலைகளில் கிளினிக் மருந்து மற்றும் அரச ஒசுசல மூலம் பெற்றுக்கொள்ளப்படுமு; மருந்து வகைகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணியை நிறைவேற்றுவதற்கு தபால் திணைக்கள பணியாளர் சபையினருக்கு சிரமம் என்பதினால் இந்த நடவடிக்கையை சுகாதார பிரிவின் உடன்பாட்டிற்கு அமைய 2020.06.15 திகதி முதல் நிறுத்தப்படுவதை அறிவிக்கின்றோம். 
மேலும் இந்த மருந்து வகைகளை விநியோகிக்கும் பணியை எதிர்காலத்திலும் மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவு மற்றும் நுகர்வோரான பொது மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் இ இந்த பணிகளை நிறைவேற்றுவதற்காக முறையான வேலைத்திட்டமொன்றை வகுத்து எதிர்காலத்தில் அது தொடர்பாக அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் அறிவிக்கின்றோம் என்று தபால் மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தபால் மூலம் இடம்பெற்ற கிளினிக் மருந்து விநியோகம் இடைநிறுத்தம்! தபால் மூலம் இடம்பெற்ற கிளினிக் மருந்து விநியோகம் இடைநிறுத்தம்! Reviewed by irumbuthirai on June 15, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.