சுரக்ஷா காப்புறுதி பற்றிய அறிவித்தல்..



இவ்வருடம் மே 31 ஆம் திகதி முதல், அமுலுக்கு வரும் வகையில் மாணவர்களுக்கான. சுரக்ஷா காப்புறுதி பயன்களை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். இதற்கமைவாக காப்புறுதி பயன்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் அல்லது நாடு முழுவதுமுள்ள அதன் கிளைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.   
அனைத்து பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த சுரக்ஷா மாணவர் காப்பீட்டு திட்டம், இவ்வருடம் மே 31 ஆம் திகதி முதல், இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதோடு, அது தொடர்பான பிரதிபலன்களையும் அந்நிறுவனம் தொடர்ச்சியாக வழங்கும் எனவும், கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
மேலதிக விபரங்களை, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை (011 2357357) தொடர்பு கொள்வதன் மூலம் அல்லது , 011 2319015, 011 2319016, 011 2319017 ஆகிய சுரக்ஷா சேவை தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவே தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அ.த.தி.

சுரக்ஷா காப்புறுதி பற்றிய அறிவித்தல்.. சுரக்ஷா காப்புறுதி பற்றிய அறிவித்தல்.. Reviewed by irumbuthirai on June 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.