ஜோர்ஜ் ப்ளாய்ட்டுக்காக இலங்கையில் நடந்த ஆர்ப்பாட்டமும் அமெரிக்கத் தூதரகத்தின் மறுப்பும்



இன்று அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை நிறுத்தும்படி அதிகாரிகளிடம் எந்தவிதமான கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அது ஒவ்வொருவரினதும் உரிமையாகும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 
அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முன்னணி சோசலிச கட்சி ஆர்ப்பாட்டம் ஒன்றை இலங்கை அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு தடையுத்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றில் இலங்கை போலீசார் நேற்று பெற்றிருந்தனர். 
ஆனால் இன்று திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடந்தபொழுது அதன் உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இன்னும் சிலர் 

லிப்டன் சுற்றுவட்டாரத்தில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். அதன் போதும் போலீசாருடன் அமைதியின்மையான நிலைமை ஏற்பட்டவுடன் அதிலும் சிலர் கைது செய்யப்பட்டனர். 
இந்தக் கைதுகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன. 
இதேவேளை இது தொடர்பாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தும்படி எந்தவித அதிகாரிகளுக்கும் தாம் கோரிக்கை விடுக்கவில்லை என தெரிவித்துள்ளது. 
ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 53 பேர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
தொண்டமானின் மரணத்தில் செயல்படுத்தப்படாத சட்டம், அமெரிக்க அதிகாரி இலங்கை வரும்பொழுது விமான நிலையத்தில் செயல்படுத்தப்படாத சட்டம் நியாயமான கோரிக்கை ஒன்றுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் பொழுது மட்டுமா செயல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்து சமூக வலைதளங்களில் இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜோர்ஜ் ப்ளாய்ட்டுக்காக இலங்கையில் நடந்த ஆர்ப்பாட்டமும் அமெரிக்கத் தூதரகத்தின் மறுப்பும் ஜோர்ஜ் ப்ளாய்ட்டுக்காக இலங்கையில் நடந்த ஆர்ப்பாட்டமும் அமெரிக்கத் தூதரகத்தின் மறுப்பும் Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.