ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது ஏன்?


ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட 02 அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் தேதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 
தேரருக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதிகள் குழுவின் உறுப்பினராக இருந்த ஒருவர் இந்த அடிப்படை உரிமை மீதான மனுக்களை விசாரணை செய்யும் நீதிபதிகள் குழுவின் உறுப்பினராகவும் இருப்பதாலேயே இவ்வாறு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
எனவே இந்த மனுக்கள் மீதான விசாரணையை வேறு நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

(தமிழ்அததெரண)
ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது ஏன்? ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது ஏன்? Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.