பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் கட்டங்களையும் அதற்கான திகதிகளையும் நடைமுறைகளையும் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று அறிவித்துள்ளார். அந்தவகையில் பாடசாலைகள் ஜூன் மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட இருக்கிறன.
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலைகள் இம்மாதம் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இது நான்கு கட்டங்களில் ஆரம்பிக்கப்படும். அவை பின்வருமாறு இடம்பெறும்....
1. முதலாம் கட்டம் ஜூன் 29 தொடக்கம் ஜூலை 3ஆம் திகதி வரை ஆகும். இதில் அதிபர் ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் மாத்திரம் வரவேண்டும். இந்த முதல் வாரத்தில் பாடசாலைகள் சுத்தப்படுத்துதல், கிருமி தொற்று நீக்கம், அதேபோன்று நேரசூசி மாற்றம் போன்ற பல ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
2. இரண்டாம் கட்டம் ஆரம்பமாவது ஜூலை 6ம் திகதி ஆகும். ஜூலை 6 தொடக்கம் தரம் 5, தரம் 11, தரம் 13 ஆகிய மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு வரவேண்டும். இந்த இரண்டாம் கட்டம் ஜூலை 6 தொடக்கம் ஜூலை 17 வரையான இரு வாரங்கள் ஆகும்.
3. மூன்றாம் கட்டம் ஆரம்பமாவது ஜூலை 20ஆம் திகதி ஆகும். எனவே இத்தினம் முதல் தரம் 10 தரம் 12 ஆகிய மாணவர்களும் சேர்ந்து வரவேண்டும். இந்த மூன்றாம் கட்டம் ஜூலை 20 தொடக்கம் 24 வரையாகும்.
4. நான்காம் கட்டம் ஜூலை 27 ஆகும். இத்தினம் தொடக்கம் தரம் 3, 4, 6, 7, 8, 9 ஆகிய மாணவர்களும் பாடசாலைக்கு வரவேண்டும்.
தரம் 1 மற்றும் 2 மாணவர்கள் எப்போது பாடசாலைக்கு வரவேண்டுமென்ற திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி மற்றும் முறை: வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு:
Reviewed by irumbuthirai
on
June 09, 2020
Rating:
No comments: