கொரோனா இல்லாத நாடாக நியூஸிலாந்து தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நியூசிலாந்தில் சுகாதார அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .
கொவிட் நோயாளிகள் எவரும் நியூசிலாந்தில் தற்போது இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குணமடைந்து வீடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் ஆயிரத்து 154 பேர் நோயால் பாதிக்கப்பட்டனர். எனினும் கடந்த 17 நாட்களாக எந்த ஒரு நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை.
இதன் காரணமாக திருமண நிகழ்வுகள் மரணச்சடங்கு பொது நிகழ்வுகள் பொது போக்குவரத்து ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் இன்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஏனைய நாடுகளுக்கு இடையிலான பயணத் தடை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இல்லாத நாடாக தன்னை அறிவித்த நாடு...
Reviewed by irumbuthirai
on
June 09, 2020
Rating:
No comments: