சமீப காலத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் பெரும்பாலானவற்றுக்கு சாரதிகளின் கவனக்குறைவே காரணம் என்பது தெரியவந்தது. வீதி விபத்துக்களை தடுப்பதற்காக சட்டம் கடுமையாக்கப்பட்ட போதிலும் நாளாந்தம் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் நேற்றைய தினம் எரிபொருள் அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது போக்குவரத்து முகாமைத்துவ மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கையில்....
பல வருடங்களாக இது தொடர்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார். வாகன விபத்துகளை தடுக்கும் வகையில், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் சுட்டிக்காட்டினார். தினமும் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்களுக்கு பூச்சியத்திலிருந்து 24 வரை புள்ளிகளை வழங்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்நடைமுறையின் கீழ், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான புள்ளிகள் 24 இலிருந்து மதிப்பீடு செய்யப்படுவதோடு, விபத்துகள் ஏற்படும் பட்சத்தில் குறித்த புள்ளிகள் குறைக்கப்படும்.
இம்முறையின் கீழ், புள்ளிகள் குறையும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் எனவும் போக்குவரத்து முகாமைத்துவ மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.
அ.த.தி.
மீண்டும் அறிமுகமாகும் வாகன சாரதி புள்ளி முறை...
Reviewed by irumbuthirai
on
July 23, 2020
Rating:
No comments: