கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் 120 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் ரஷ்யாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி அதை மனிதரிடத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளதாக அந்த நாட்டைச் சேர்ந்த செய்தி முகாமையான ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தகவலை institute for translations medicine and biotechnology நிறுவன இயக்குனர் வாடிம் டாரஷோவ் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்துள்ளோம். மாஸ்கோவில் உள்ள செச்சனோவ் அரச மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தன்னார்வலர்களை கொண்டு மேற்கொண்ட இந்த பரிசோதனையில் நாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து பாதுகாப்பானது என தெரியவந்துள்ளது. இந்தப் பரிசோதனையில் பங்கேற்ற முதல் குழுவினர் ஜூலை 15ஆம் தேதியும் இரண்டாவது குழுவினர் ஜூலை 20ஆம் தேதியும் வீடு திரும்புவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த தடுப்பு மருந்து எப்போது விற்பனைக்கு வரும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.
BBC
உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து: மனிதர்களிடத்திலும் பரிசோதனை வெற்றி:
Reviewed by irumbuthirai
on
July 14, 2020
Rating:
No comments: