சகல பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி முதல் வழமை போல் ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று(14) தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில்,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பாடசலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சுமார் 3 மாத காலங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தன. மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இணையத்தளங்கள் ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த ஜுன் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் வைத்திய பீடம் உள்ளிட்ட ஏனைய பீடங்களின் இறுதி ஆண்டு மாணவர்களின் பரீட்சைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் கூறினார். சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்படுமாறு அனைத்து பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
விடுதிகளில் முன்னர் நடைமுறையில் இருந்த ஒரு மாணவருக்கு ஒரு அறை மாத்திரம் என்ற முறை தற்பொழுது கொவிட் 19 அச்சுறுத்தல் குறைந்திருப்பதனால் மாணவர்கள் வழமை போன்று விடுதிகளில் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தல் தொடர்பாக...
Reviewed by irumbuthirai
on
August 14, 2020
Rating:
No comments: