பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்து நிராகரிக்கப்பட்ட தகுதியானவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தொழிலற்ற பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மேன்முறையீட்டுக்காக விண்ணப்பிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
தொழில் அற்ற பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் - 2020
மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்கள் பயிற்சிக்காக அழைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள, இருப்பினும் அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்து, நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் ஊழியர் சேமலாப நிதியில் அங்கத்துவம் இருந்தமை (EPF) மற்றும் தொழிலில் (Job) ஈடுபட்டிருந்தமை என்ற ரீதியில் குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு மேன்முறையீட்டை சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கும் தகுதிகளைப் பெறுவார்களாயின் பயிற்சிக்கு அழைப்பதற்கு எதிர்பாரப்பதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவாக இவ்வாறான விண்ணப்பதார்களுக்கு அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.pubad.gov.lk இல் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக விண்ணப்பிக்குமாறும், 2020.09.15 ஆம் திகதிக்கு முன்னர் தமது மேன்முறையீட்டை பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறும் அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாலக கலுவெவ,
அரசாங்க தகவல் திணைக்கள
பணிப்பாளர் நாயகம்.
(அ.த.தி.)
பட்டதாரி நியமனம்: நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வெளியான அறிவித்தல்:
Reviewed by irumbuthirai
on
August 22, 2020
Rating:
No comments: