அமெரிக்க தேர்தல்:
கொவிட் 19 கொள்ளை நோய்க்கிடையே எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
அமெரிக்க யாப்பின் படி ஜனாதிபதி தேர்தல் தினம் நிச்சயிக்கப்பட்டதாகும். தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்யும் திகதியும் நிச்சயிக்கப்பட்டது.
இம்முறையும் வழமை போன்று குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களிடையே போட்டி நிலவுகிறது.
அமெரிக்க தேர்தல் முறை கொஞ்சம் சிக்கலானது. விளக்குவது கடினம். ஜனாதிபதியுடன் உப ஜனாதிபதி தேர்வும் நடைபெறும்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அவருடைய துணை ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் போட்டியிடுகிறார்.
ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார். இவர் பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருக்கும் போது அவரின் துணை ஜனாதிபதியாக இருந்தவர். பைடனின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் ஒரு பெண். இது அமெரிக்க வரலாற்றில் விஷேட நிகழ்வாகும். பைடன் நவம்பரில் நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை ஜனாதிபதியாக அவர் தெரிவாவார்.
#வரலாற்றில் இடம்பிடிக்கும் கமலா ஹரீஸ்.
முதலாவது ஆசிய வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரீஸ்
அவர் 55 வயதுடைய கமலா ஹாரிஸ் எனும் ஜமெய்க்கா மற்றும்
ஆசிய வம்சாவளி கொண்ட பெண்ணாவார். கலிஃபோனியா செனடரான இவர் ஒரு சட்டத்தரணி. முதலில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பைடன் உடன் போட்டியிட்டார். போட்டியில் பின் வாங்க ஆரம்பித்ததும் போட்டியில் இருந்து விலகி பைடனுக்கு ஆதரவளித்தார். தற்போது ஜோ பைடனின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வந்திருக்கிறார்.
இவர் அமெரிக்க சென்ட் க்கு தெரிவான முதலாவது ஆசிய வம்சாவளி பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கமலா ஹரிசின் தாய் இந்தியாவை அதுவும் தமிழ் நாட்டை சேர்ந்தவர். அவரின் குடும்பத்தவர்கள் இன்றும் தமிழ் நாட்டில் வசிக்கின்றனர். புகழ் பெற்ற ஜோசியராக புது டில்லியில் வசிக்கும் பாலச்சந்தர கோபாலன் கமலாவின் மாமனார் ஆவார்.
#இலங்கை வம்சாவளி ரோஹிணி:
கமலா ஹரிஸ் தனது அலுவலக ஆளணித் தலைமை உத்தியோகதராக ரோஹிணி லக்ஷ்மி எனும் இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்ணை நியமித்துள்ளார். அவ்வாறான பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்ட முதல் ஆசிய வம்சாவளிப் பெண்ணாக அவர் உள்ளார். இவர் இலங்கையின் வடபுலத்தை சேர்ந்த பெற்றோருக்கு மகளாக பிறந்தவர். வைத்தியரான இவரது தந்தை 1980 களில் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தவர்.
அத்துடன் மிச்சிகன் மற்றும் ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்னர் மிச்சிகன் செனடர் டெபி இன் அலுவலக பணியாளராகவும், பின்னர் கொளராடோ செனடர் மைக்கல் பெனட் இன் சுகாதார ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.
அக்காலப்பகுதியில் கமலா ஹாரிசின் அறிமுகம் ரோஹிணிக்கு கிடைத்தது. இருவரும் தமிழ் என்பதால் ஒட்டுறவு அதிகமாக இருந்தது. அதன் பின்னர் உதவி அலுவலக ஆளணித் தலைமை உத்தியோகதராக கமலாவுடன் இணைத்து கொண்டார். தற்போது அலுவலக ஆளணித் தலைமை உத்தியோகதர் பதவிக்கு மேலதிகமாக கமலாவின் சிரேஷ்ட ஆலோசகர் பதவியையும் அவர் வகித்து வருகிறார்.
#கொரோனா பின்னணியில் அமெரிக்க தேர்தல்:
கொரோணா கட்டுப்பாடு மிக மோசமான நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும். நாட்டின் தலைவர் என்ற ரீதியில் டொனால்ட் டிரம்ப் ஒரு சிறு பிள்ளை போன்றே ஆட்சி செய்கிறார்.
குறிப்பாக தனக்கு கொரோணா என்று வேடிக்கையாக சொல்லித் திரிந்தமை, வெட்டியாக சீனாவுடன் முரண்பாட்டுக் கொண்டு நின்றமை, ஜோர்ஜ் ப்ளோயிட் கொலைக்கு பின் நடந்து கொண்ட முறை என்பன அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை உருவாக்கி உள்ளது.
கிளிண்டன், ஜோர்ஜ் W புஷ், பரக் ஒபாமா ஆகிய மூவரும் தொடர்ச்சியாக தமது இரு பதவிக் காலங்களிலும் ஜனாதிபதியாக இருந்த பின்னர் ஓய்வு பெற்றனர். ஆனால் டிரம்ப் அண்மைக்கால ஜனாதிபதிகளில் தோல்வி கண்டு ஒதுங்கும் தலைவராக மாறலாம் என்றே எதிர்வு கூறப்படுகிறது. என்ற போதிலும் கொரோனா பாதிப்பினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்ட அமெரிக்க பொது மக்களிற்காக அரசு பெரும் தொகையை செலவு செய்கிறது. மூன்றாம் மண்டல நாடுகள் போன்று இந்த நலன்புரிகள் ஆட்சியை தீர்மானிக்குமா என்பதை நவம்பர் 3 ஆம் திகதியே அறிந்து கொள்ளலாம்.
#இலங்கை தமிழர் பிரச்சினையும், அமெரிக்க தேர்தலும்:
மறுபுறம் ஜோ பைடன் வெற்றி பெற்றால் அமெரிக்க அரசின் அதிகாரம் மிக்க இரு பதவிகளுக்கு தமிழர்கள் வரப் போகிறார்கள். இது இலங்கையின் தமிழர் பிரச்சினை குறித்த அமெரிக்காவின் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரலாம் என்று எதிர்வு கூறலாம். குறிப்பாக தமிழ் டையஸ்போராவை பிரதிநிதித்துவப்படுத்தும் ரோஹிணி போன்றவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து எவ்வாறான நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பது தெளிவில்லை. இந்நிலையில் இலங்கை குறித்த அமெரிக்காவின் கொள்கையில் எவ்வாறான மாற்றங்கள் வரும் என்ற கேள்விக்கான பதிலை காலம்தான் சொல்ல வேண்டும். சில வேளை அந்த பதில் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளலாம்....
fபயாஸ் M fபரீட்.
fபயாஸ் M fபரீட்.
அமெரிக்க தேர்தல்.... இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளுமா..?
Reviewed by irumbuthirai
on
August 26, 2020
Rating:
No comments: