கல்வியமைச்சின் கீழ் இரு பெளத்த பல்கலைக்கழகங்கள்..



இலங்கை பௌத்த பாலி பல்கலைக்கழகத்தையும் புத்த ஷிராவக பிக்கு பல்கலைக்கழகத்தையும் மகாசங்கத்தினரின் வேண்டுகோளின்பேரில் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். 
கடந்த வெள்ளி (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி பௌத்த ஆலோசனைக் குழுவின் ஐந்தாவது கூட்டத்தொடரின்போது ஜனாதிபதியினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 
இந்த இரண்டு பல்கலைக்கழகங்களையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார். இப்பல்கலைக்கழகங்களின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சரின் கீழ் முறையாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 
அறநெறிப் பாடசாலைகள், பிக்குகளின் கல்வி, பிரிவெனாக்கள் மற்றும் பெளத்த பல்கலைக்கழகங்களின் முன்னேற்றத்திற்காக இராஜாங்க அமைச்சு ஒன்றை நேரடிக் கண்காணிப்புக்காக நியமித்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 
அரசாங்க தொழில்வாய்ப்புகளை வழங்கும்போது அறநெறிப் பாடசாலைகளின் இறுதி ஆண்டு மற்றும் தர்மாச்சாரிய சான்றிதழ்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறைமையொன்றின் அவசியத்தை சங்கைக்குரிய திவியகஹ யஸஸி தேரர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கல்வியமைச்சின் கீழ் இரு பெளத்த பல்கலைக்கழகங்கள்.. கல்வியமைச்சின் கீழ் இரு பெளத்த பல்கலைக்கழகங்கள்.. Reviewed by irumbuthirai on August 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.