கிராம உத்தியோகத்தர்கள் தமது விடுமுறை நாளை தவிர வாரத்தில் 6 நாட்களும் 24 மணித்தியாலமும் கடமையில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 08.30 முதல் பி.ப. 04.15 வரையும் சனிக் கிழமைகளில் பிற்பகல் 12: 30 மணி வரையும் கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.
திங்கட்கிழமைகளில் பிரதேச செயலகங்களுக்கு செல்ல வேண்டும்.
திங்கட்கிழமை பொதுமக்கள் தினமாக அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க இந்த புதிய நடைமுறை தொடர்பிலான சுற்றுநிருபமும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகள் எதிர்வரும் 1.10.2020 முதல் அமுல்படுத்தப்பட வேண்டும்.
இது தொடர்பில் தமது பிரதேச பொது மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கையும் கிராம சேவகர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவித்தலை கீழே காணலாம்.
கிராம உத்தியோகத்தர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய நிபந்தனைகள்: சுற்றுநிருபம் வெளியானது:
Reviewed by irumbuthirai
on
September 23, 2020
Rating:
No comments: