நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் டொனால்ட் டிரம்ப்..

2021 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையேயான பிரச்னையில் தலையிட்டு சமாதான முயற்சி மேற்கொண்டதற்காக டொனால்ட் டிரம்ப்பை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் டைப்ரிங்-கெஜெடே பரிந்துரைத்துள்ளார். 
அதேபோன்று 2018ஆம் ஆண்டிலும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உனுடனான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து அவரை நோபல் பரிசுக்கு கெஜெடே பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
உலகின் மிக மதிப்புமிக்க விருதாக நோபல் பரிசு உள்ளது. நார்வே நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது அமைதி, இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், மருத்துவம் மற்றும் வேதியியல் ஆகியத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது.
நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் டொனால்ட் டிரம்ப்.. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் டொனால்ட் டிரம்ப்.. Reviewed by irumbuthirai on September 10, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.