மரண தண்டனை விதிக்கப்பட்டவர் பாராளுமன்றம் செல்ல அனுமதி



நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 
இவரால் முன் வைக்கப்பட்டிருந்த ரீட் மனுவை ஆராய்ந்தபொழுதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வதில் சிக்கல் இல்லையென அறிவிக்கப்பட்டது. 
இது தொடர்பான விசாரணை மீண்டும் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
பிரேமலால் ஜயசேகர இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பொதுஜன பெரமுண சார்பில் போட்டியிட்டு கடந்த தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர் பாராளுமன்றம் செல்ல அனுமதி மரண தண்டனை விதிக்கப்பட்டவர் பாராளுமன்றம் செல்ல அனுமதி Reviewed by irumbuthirai on September 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.