ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வடக்கு கிழக்கில் புறக்கணிக்கப்பட்டுள்ளதா?

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்பட மாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் உறுதியளித்துள்ளனர். 
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதி மற்றும் பிரதமர் இவ்வாறு உறுதியளித்தனர். 
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், ஒரே நாடு ஒரே சட்டம் என்பதில் இந்த அரசாங்கம் உறுதியாக உள்ளது என்ற அடிப்படையில், எந்த வகையான பிரதேச – இன – மத ரீதியான பாகுபாடுகள் தலை தூக்க இடமளிக்கப்படாது என்பதை வலியுறுத்தியதுடன் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு நியமனங்கள் சில காரணங்களுக்காக தற்போது வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நிறுத்தப்பட்ட போதிலும் விரைவில் வழங்கி வைக்கப்படும் எனவும், குறித்த பிரதேச மக்கள் தேவையற்ற வகையில் குழப்பமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வடக்கு கிழக்கில் புறக்கணிக்கப்பட்டுள்ளதா? ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வடக்கு கிழக்கில் புறக்கணிக்கப்பட்டுள்ளதா? Reviewed by irumbuthirai on September 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.