கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இறக்கும்போது வயது 74.
ஆந்திர மாநிலம், நெல்லூரில் பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கோவிட்-19 நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு, கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் உயிர் காக்கும் கருவிகளுடன் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மிகவும் தீவிர சிகிச்சை பிரிவில் பல்துறை மருத்துவ நிபுணர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வந்தது.
அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று கடந்த 4ஆம் தேதி முடிவு வந்தது.
இந்த நிலையில்,
இன்று (25.09.2020) காலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அதிகபட்ச உயிர் காக்கும் சிகிச்சை கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், இதய சுவாச நிபுணர்கள் கடுமையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும், மேலும் மோசம் அடைந்தது. இந்த நிலையில், பிற்பகல் 1.04 மணிக்கு அவரது உயிர் பிரிந்துள்ளது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இரு வாரங்களுக்கு முன்பு எஸ்.பி.பி உடல்நிலை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகன் எஸ்.பி. சரண்,
எனது தந்தையின் உடல்நிலை மெல்ல, மெல்ல மீண்டு வருகிறது. அவர் எங்களை எல்லாம் அடையாளம் கண்டுள்ளார். விசில் அடிக்கிறார், பாடலை ஹம்மிங் செய்கிறார், அவரது பிறந்த நாளை கூட கொண்டாடினோம் என்று தெரிவித்தார்.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டபோதும், பிற உடல் உறுப்புகள் ஒத்துழைக்காத நிலையில், போராடி மாண்டிருக்கிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
அவருக்கு தற்போது கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. எனவே, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை இல்லை" என்று மருத்துவர் தெரிவித்தார்.
காற்றில் கலந்து வந்த பாடல்கள் மூலம் எல்லோர் உள்ளங்களிலும் இடம் பிடித்த அவரை காற்றில் கலந்து வந்த வைரஸ் கொண்டு சென்றது.
SPB: சாவுடன் போராடிய அந்த நிமிடங்கள்: பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாமா?
Reviewed by irumbuthirai
on
September 25, 2020
Rating:
No comments: