திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக திங்கள் (05) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- திவ்லபிடிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பெண் பணிபுரியும் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களிடம் பீ.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது.
- குறித்த பெண்ணின் மகளுக்கும் கொரோனா இருந்ததால் அவர் படிக்கும் பாடசாலையில் உள்ளவர்களிடமும் பரிசோதனை நடத்தப்பட்டது.
- 1500 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
- யாழ்ப்பாணம், குருநாகல், மொனராகலை, மினுவங்கொடை, கட்டான, சீதுவ, ஜா-எல, திவுலபிடிய, மீரிகம, மஹர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் குறித்த ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள்.
- மறு அறிவித்தல் வரை பரீட்சை திணைக்களத்தின் ஒரு நாள் மற்றும் வழமையான சேவை கரும பீடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆனால் உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றை பிற்போடுவதற்கு இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
- ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பொலிஸ் பிரதேசங்கள் ஊடாக வாகனங்கள் மூலம் பயணிக்க முடிந்த போதிலும் அந்த பிரதேசங்களில் வாகனங்களை நிறுத்த முடியாது என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
- நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளை பார்க்க செல்வது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
- எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவிருந்த அரச கரும மொழித்தேர்ச்சி வாய்மூலப் பரீட்சைகளை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அரச கரும மொழி ஆணையாளர் நாயகம் பிரின்ஸ் சேனாதீர தெரிவித்துள்ளார்.
- கொரோனா தொடர்பில் அறிந்துக்கொள்வதற்கு 24 மணிநேரமும் இயங்கும் 1999 என்ற அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
- நாடு பூராகவும் நாளை முதல் ஊரடங்கு சட்டம் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அரசு அறிவிப்பு.
- தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு சகல பொலிசாரின் விடுமுறை மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
- பீ.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை.
- குறித்த ஆடை தொழிற்சாலையின் கொரோனா பரவல் கொத்தானது (Cluster) வெலிசரை கடற்படை முகாம் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் என்பவற்றை விட பாரதூரமானது என தொற்று நோயியல் பிரிவின் பிரதானி தெரிவிப்பு.
- ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் பௌத்த தஹம் பாடசாலைகளை மறு அறிவித்தல் வரை மூடல்.
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-10-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
October 06, 2020
Rating:
No comments: