திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 2ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரிப்பு.
- 06.10.2020 இரவு 9.40 மணிக்கு உள்ள தகவல்களின் படி இலங்கையில் இதுவரை மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 252 என பதிவானது.
- இலங்கையில் இதுவரை ஒரே நாளில் பதிவான ஆகக்கூடிய தொற்றாளர்கள் என்ற நிலை அன்றைய தினம் பதிவானது.
- 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் பொதுமக்கள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
- கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதற்கு முன்னர் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட திவுலபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பகுதிகளில் தொடர்ந்து அமுலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
- மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களின் சகல குடும்ப உறுப்பினர்களும் எக்காரணம் கொண்டும் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே இருக்குமாறு இராணுவத்தளபதி அவசர வேண்டுகோள்.
- கம்பஹாவில் இருந்து வெயாங்கொட வரையிலான எந்த புகையிரத நிலையங்களிலும் புகையிரதம் நிறுத்தப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் அறிவிப்பு.
- 07,08, 09 ஆம் திகதிகளில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கும், பிராந்திய அலுவலகங்களுக்கும் பொது மக்கள் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
- நாட்டில் மறு அறிவித்தல் வரை பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு. அதன்படி, கண்காட்சிகள், கருத்தரங்குகள், விருந்துபசாரங்கள், உட்புற மற்றும் வெளிப்புற நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மதம் சார்ந்த ஊர்வலங்கள் உட்பட அனைத்து விதமான ஊர்வலங்களுக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
- தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் ஊடாக தூர பிரதேச பேருந்துகளுக்கு பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. எனினும், குறித்த பிரதேசங்களில் பேருந்தை நிறுத்துதல், பயணிகளை இறக்குதல் அல்லது ஏற்றுதல் இடம்பெறக்கூடாது என பொலிஸார் அறிவிப்பு.
- கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி கல்வி கற்கும் பாடசாலையில் 101 மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என அறிவிப்பு.
- 7, 8, 9 ஆம் திகதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி அலுவலகம் மற்றும் வேரஹெர அலுவலகம் பொதுமக்களுக்காக திறக்கப்படமாட்டாது என அறிவிப்பு.
- குறித்து ஆடைத் தொழிற்சாலை தற்போதைய நிலைமை தொடர்பில் புதிய அறிக்கையை வெளியிட்டது.
- திவுலபிடிய, மினுவங்கொடை மற்றும் வெயாங்கொடை ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் பணி புரியும் ஊழியர்கள் தாம் தங்கியுள்ள இருப்பிடங்களிலேயே தொடர்ந்தும் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்.
- யாருக்கேனும் காய்ச்சல் உட்பட ஏனைய அறிகுறிகள் ஏதாவது இருக்கும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு செல்லுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இதை புறக்கணிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிப்பு.
- மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் சகல தனியார் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு தடை விதிப்பு.
- கொழும்பு வொல்கட் மாவத்தையில் அமைந்துள்ள பிரதி காவல் துறை மா அலுவலகத்தில் இயங்கிய காவல் துறை சான்றுப்படுத்தல் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் அலுவலகம் நாளை முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக காவல் துறை ஊடகப்பிரிவு தெரிவிப்பு.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 06-10-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
October 07, 2020
Rating:
No comments: