திவுலபிடிய கொரோனா எதிரொலி: 13-10-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 9ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிள் சேவையாற்றக்கூடிய ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை எதிர்வரும் 3 தினங்களுக்குள் புதுப்பித்து கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய நிலமையின் அடிப்படையில் தேவை ஏற்படின் புலனாய்வு பிரிவிற்கு தகவல்களை வழங்குவதற்கு நிறுவன பிரதானிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
  • கொரோனா தொற்று காரணமாக மன்னார் மாவட்டத்தில் 2 கிராமங்கள் மூடப்பட்ட நிலையில் நேற்று (12) மாலை 6.30 மணி அளவில் மீண்டும் குறித்த 2 கிராமங்கள் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் மன்னாரின் பல பாகங்களிலும் இன்று செவ்வாய்க்கிழமை காலை கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. 
  • ஹொரண வைத்தியசாலையில் மேலும் 5 நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் 3 வைத்தியர்களும் அடங்குவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறான சகல தகவல்களும் உண்மைக்கு புறம்பானவை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். ஹொரண வைத்தியசாலையில் தாதி ஒருவருக்கு மாத்திரமே தொற்று ஏற்பட்டுள்ளது. 41 பேர் முதல் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு பி.சி.ஆர் பரசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஆகவே தற்போதைய நிலையில் ஹொரண வைத்தியசாலையில் எவருக்கும் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று இல்லை´ என ஹொரண ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் அயந்தி ஜயவர்தன தெரிவிப்பு. 

  • மக்களின் நன்மைக்காக எத்தனை பேரையும் தனிமைப்படுத்த தயார் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்ததாக செய்தி வெளியானது. 
  • கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக உயிரிழந்த, வெளிநாட்டில் பணியாற்றிய இலங்கை தொழிலாளர்களுக்கு காப்பீட்டு இழப்பீடுகளை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, உயிரிழந்த 14 பேர் சம்பந்தமான ஆவணங்கள் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உயிரிழந்த 14 தொழிலாளர்களில் 12 பேர் ஆண்கள் என்பதோடு இருவர் பெண்களாவர். அவர்களில் ஒன்பது பேர் சவுதி அரேபியாவிலும், நான்கு பேர் குவைத்திலும், ஒருவர் டுபாயிலும் உயிரிழந்துள்ளனர். 
  • கடந்த ஜூலை மாதம் மாலைத்தீவில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து சுமார் 4 மாதங்கள் கடந்த நிலையில் நபரொருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கஹவத்தை வெல்லந்துர பிரதேசத்தை சேர்ந்த இவர் மீண்டும் மாலைத்தீவிற்கு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் கொவிட் 19க்கு மத்தியிலான இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அரசாங்கத்தினால் பரிப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய உணவுகள் சிலவற்றுக்கான இறக்குமதித் தீர்வை வரி நீக்கப்பட்டது. 
  • இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது. அதன்படி, இதுவரை நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5038 ஆக அதிகரிப்பு. இதேவேளை மினுவாங்கொடை கொரோனா கொத்தணி இன்றைய தினம் (13) மேலும் 145 ஆல் அதிகரிப்பு.
  • Irumbuthirainews.
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 13-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 13-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.