திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 11ம் நாள் அதாவது வியாழக்கிழமை (15) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- கட்டுநாயக்க பொலீஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் இன்று (15) காலை 5 மணி முதல் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்.
- இன்று (15) காலை 5 மணிக்கு உள்ள நிலவரப்படி மொத்தமாக இன்னும் 170 கொரோனா நோயாளிகளுக்கு மாத்திரமே சிகிச்சை அளிக்கக் கூடிய இடம் இருப்பதாக Covid-19 ஒழிப்பு தேசிய மத்திய நிலையம் தெரிவிப்பு.
- கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, உரிய தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் 5 பேரினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- கொழும்பு மாநகர சபையின் பொது உதவிப் பிரிவின் சிரேஷ்ட உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு.
- களுத்துறை வைத்தியசாலையில் கடமை புரியும் தாதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக Covid-19 தடுப்பு தேசிய மத்திய நிலையம் அறிவிப்பு.
- நாட்டில் காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள திரையரங்கங்களை எதிர்வரும் 31 வரைமூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம்.
- ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை நாளை தினம் (16) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறப்பதற்கு அனுமதித்துள்ளதாக ராணுவ தளபதி தெரிவிப்பு.
- புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியது. இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் நபர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகரிக்காமல் அபராதம் விதிக்கப்படும் அல்லது 06 மாத கால சிறை தண்டனை வழங்கப்படும் அல்லது இரண்டும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- இலங்கையில் கொரோனா பரவலானது இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என விஞ்ஞான ரீதியாக தெளிவாவதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு.
- வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 6 பேர் அடங்கலாக நாட்டில் இன்றைய தினம் 74 பேருக்கு கொவிட்-19 உறுதியானது. இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,789 ஆக உயர்வு. அதற்கமைய இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 5244 அதிகரிப்பு.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 15-10-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
October 16, 2020
Rating:
No comments: