திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 17ம் நாள் அதாவது புதன்கிழமை (21) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- கோட்டை காவல்நிலையத்தின் இரண்டாம் மாடியில் உள்ள மேல் மாகாண விசேட விசாரணை பிரிவின் அதிகாரி ஒருவருக்கு நேற்றைய தினம் (20) கொவிட்-19 தொற்றுறுதியானது. இதனைத் தொடர்ந்து குறித்த பொலிஸ் நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் இன்றைய தினமே ஆரம்பிக்கப்பட்டது.
- புலமைப் பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் கம்பஹா மாவட்டத்திலும், குளியாப்பிட்டி கல்வி வலையத்திலும், விடைத்தாள் திருத்தப்பணிகள் இடம்பெறாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு.
- பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை தொடர்ந்து அந்த சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது.
- இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை கம்பஹா மாவட்டத்தில் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்.
- மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளருக்கு கொவிட் 19 தொற்றுறுதி. இதன்காரணமாக அந்த வர்த்தக நிலையம் உள்ளிட்ட மேலும் ஒரு வர்த்தக நிலையமும் மூடல்.
- எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் கொவிட் 19 சவால்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்றை மேற்கொள்ள இன்று பாராளுமன்றத்தில் தீர்மானம்.
- ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்கள் அதற்குரிய ஆவணங்களை ஊரடங்கிற்கான அனுமதி அட்டையாக பயன்படுத்த முடியம் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவிப்பு.
- அகலவத்தைய பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரக்கொட, பேரகம, அகலவத்தை, தாபிலிகொட, கெக்குலந்தல வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவின் பெல்லன கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு.
- நாட்டில் இன்றைய தினம் 167 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,978 ஆக அதிகரிப்பு.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 21-10-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
October 23, 2020
Rating:
No comments: