திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 21ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- சதோச நிறுவனங்களில் 600 ரூபாய்க்கும் மேற்பட்ட அளவில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு மாத்திரமே சீனி கிலோ ஒன்று 85 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவிப்பு.
- கொவிட்19 அச்சுறுத்தல் காரணமாக, ஊழியர் சேமலாப நிதிய பயனாளிகளின் விண்ணப்பங்களை அருகில் இருக்கின்ற தொழில் அலுவலகங்களில் மாத்திரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நடமாட்ட கட்டுப்பாடுகள் குறித்து கண்காணிப்பதற்காக, விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு.
- நாடு முழுவதும் உள்ள மீன் சந்தைகளை மூடவேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவிப்பு.
- கொழும்பு மாவட்டத்தில், கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடை முதலான காவல்துறை அதிகார பிரதேசங்களில் இன்று மாலை 6 மணிமுதல் மீள் அறிவித்தல்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
- கம்பஹா மாவட்டத்தில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், மறு அறிவித்தல்வரை அவ்வாறே தொடரும் என அறிவிப்பு.
- தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளைய தினம் (26) அத்தியவசிய உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மருந்தகங்கள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையில் திறக்கப்படும் எனவும் அத்துடன் நாளைய தினம் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் திற்ந்து வைக்கப்படும் எனவும் இராணுவ தளபதி அறிவிப்பு.
- மிரிஹான பொலிஸ் நிலையத்தின் சிற்றூண்டிச்சாலையில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று. இவர் பேலியகொட மீன் விற்பனை சந்தைக்கு சென்று வந்துள்ளார்.
- தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 15 பொலிஸ் பிரிவுகளுக்கு 5000 ரூபா வழங்குவதற்கான நிதியை பெற்றுக் கொள்வதற்காக நிதி அமைச்சிடம் கம்பஹா மாவட்ட செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- அளுத்கம, பயாகல மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மீள அறிவிக்கும் வரையில் தொடர்ந்து நீடிக்கும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த ஊரடங்கு நாளை (26) அதிகாலை 5 மணி வரை மாத்திரமே போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- மேல் மாகாணம், காலி பிரதான தபால் நிலையம் மற்றும் அதன் உப நிலையங்கள், குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டி மற்றும் அதனைச் சூழவுள்ள தபால் நிலையங்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவிப்பு.
- பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை மற்றும் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடமையாற்றும் எந்தவொரு பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் அறிவிப்பு.
- நாளை (26) முதல் அனைத்து புகையிரத சேவைகளும் இரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கரையோர புகையிரத பாதையில் நாளாந்த சேவையில் ஈடுப்படும் 6 புகையிரத சேவைகள் கொள்ளுப்பிட்டி வரையிலும் இடம்பெறும். உயர்தர பரீட்சை காலபகுதிக்கு அமைவாக மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக விசேட ரயில் சேவைகள் சில இடம் பெறவிருப்பதாகவும் தெரிவிப்பு.
- அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என்பதால் உயர்தர மாணவர்கள் மற்றும் பரீட்சை கடமைகளோடு தொடர்புபட்ட அதிகாரிகள் அந்தந்த மையங்களுக்கு அறிக்கை அளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்தார்.
- இலங்கையில் COVID19 தொற்றால் 16 வது மரணம் பதிவாகியது. 70 வயதுடைய ஆண் , கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
- நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில் தம்பான ஆதிவாசிகள் பழங்குடி கிராமத்திற்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வருகை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
- இன்று பிற்பகல் முதல், புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு, இலங்கை போக்குவத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபடமாட்டாது என அறிவிப்பு.
- மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்ட மற்றும் வேரஹெர காரியாலயங்களும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் ஆகியனவும் நாளை தொடக்கம் மீள் அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு.
- இன்றைய தினம் மாத்திரம் 351 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இலங்கையில் இதுவரை இனங்காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 7875 ஆக அதிகரிப்பு.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 25-10-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
October 28, 2020
Rating:
No comments: