பாடசாலை மாணவர்களின் ஊடகத்துறை கல்வியை மேம்படுத்துவதற்காக மாவட்டங்களை கேந்திரமாகக் கொண்டு 25 வெகுஜன ஊடக பாடசாலைகள் நாடு முழுவதிலும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் திருமதி. சாரா ஹல்டன் (Sarah Hulton) மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்றது.
இதன் போது அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
பாடசாலைக் கல்வியின் போது மாணவர்களுக்கு
வெகுஜன ஊடகம் தொடர்பான தெளிவு மற்றும் ஊடக நெறிமுறைகள் தொடர்பாக உரிய கல்வியை வழங்க வேண்டும் என்றும் இதற்காக மாவட்ட மட்டத்தில் ஊடக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக வடக்கை கேந்திரமாகக் கொண்டு யாழ் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு ஊடக கல்வி அறிவை மேம்படுத்துவதை மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் இதற்கமைவாக இந்த வேலைத்திட்டம் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் அரசாங்க தகவல் திணைக்களம் குறுஞ்செய்தி சேவையைப் போன்று சமூக ஊடகங்கள் ஊடாக செய்திகளை வழங்கும் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இதற்கு மேலதிகமாக ஏனைய ஊடக நிறுவனங்களை தொடர்புபடுத்தி இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அ.த.தி.
நாடு முழுவதிலும் 25 ஊடக பாடசாலைகள்...
Reviewed by irumbuthirai
on
October 14, 2020
Rating:
No comments: