திவுலபிடிய கொரோனா எதிரொலி: 29-10-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 25ம் நாள் அதாவது வியாழக்கிழமை (29) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • பேலியகொடை மீன் சந்தையில் காணப்படும் காவல் துறை பாதுகாப்பு அரணில் கடமையாற்றிய காவல் துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்கு சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • மீகொடை பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்ய வருகை தந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டமையை தொடர்ந்து தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் 11 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு, அங்கு கடமையாற்றிய 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். 
  • வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் போது மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதிவு சீட்டினை ஊரடங்கு உத்தரவிற்கான அனுமதி அட்டையாக பயன்படுத்த முடியும் என அறிவிப்பு. 
  • தனது வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த பெண்ணிண் உடல் நிக்கவெரட்டிய பகுதியில் உள்ள பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவரது PCR பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லை. 

  • ப்ரெண்டிக்ஸ் கொத்தணி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க நியமிக்கப்பட்ட குற்றப்புலனாய்வு பிரிவினை சேர்ந்த அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்றுதியானது. 
  • கொரோனா தொற்றினை அறிந்து கொள்ள மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கான போதியளவு கருவிகள் நாட்டில் இல்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு. 
  • களுத்துறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சில கிராமங்கள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன. அந்தவகையில் மத்துகம, பதுகம நவ ஜனபதய கிராமத்தை தவிர்ந்த அனைத்து கிராமங்கள் வழமைக்கு திரும்பிள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 
  • பொகவந்தலாவ, கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் இரு பெண்களுக்கு கொரோனா உறுதியானது. இவர்கள் பேலியகொடை கொத்தணியோடு தொடர்புள்ளவர்கள். 
  • இன்று தொடக்கம் அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்து வரையறுக்கப்பட்டிருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
  • நேற்று (28) ஜப்பான் செல்லவிருந்த காலி, லபுதுவ பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • பேலியகொடை கொவிட் கொத்தணியை விட பாரிய அளவிலான கொவிட் கொத்தணி ஒன்று உருவானால் சுகாதார அமைப்புக்கு அதனை தாங்கிக்கொள்ள சக்தி இல்லை என அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. 
  • பிரண்டிக்ஸ் கோவிட் கொத்தணி தொடர்பில் விசாரணை செய்யும் கொழும்பு குற்றவியல் பிரிவிடம் இருந்து வேறு ஒரு பிரிவினருக்கு குறித்த விசாரணைகளை மாற்றுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். 
  • நுவரெலியாவில் உல்லாசப் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஷ்பகுமார தெரிவித்தார். 
  • தங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் மற்றும் அவரது 21 நாட்கள் வயதுடைய குழந்தையும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதி. 
  • நாரஹேன்பிடயில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேருக்கு மற்றும் தொழில் அமைச்சின் சாரதி ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் செயற்படுத்துமாறு மேல் மாகாண மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதம் வரையில் செயற்படுத்தப்பட்ட ´வீட்டில் இருந்தே வேலை செய்யும் காலம்´ த்தினுள் கிடைத்த அனுபவங்களை பயன்படுத்தி அத்தியாவசிய மற்றும் வேறு சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு மாற்று திட்டங்களை வகுக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • இன்றைய தினம் (29) 586 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
  • Irumbuthirainews 
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 29-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 29-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.