திவுலபிடிய கொரோனா எதிரொலி: 30-10-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 26ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதன் காரணமாக எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானமிக்கதாக மாறியுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார தெரிவிப்பு. 
  • அவசர நிலைமையின் போது சிறைச்சாலை மருத்துவமனைகளை பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிப்பு. 
  • மின்சார சபையின் நுகர்வோர் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அதாவது வீடுகளில் உள்ள மின்சார அளவீட்டு பெட்டியின் மானி தெளிவாக தெரியும்படி வைத்திருக்குமாறும், பட்டியலை வழங்க வரும் மின்மானி வாசிப்பாளர்களிடத்தின் அருகில் செல்லாது மின்சார பட்டியலை பெற்றுக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது. 

  • நேற்று (29) நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் விதிப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சிலர் பொலிஸ் பொலிஸாரிற்கு அறிவிக்காமல் மாகாணத்தை விட்டு வௌியில் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் திங்கட் கிழமை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் கொழும்பிற்கு மீண்டும் வருகையில் வௌியில் சென்ற விதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
  • மேல் மாகாணத்தில் காவற்துறை அதிகாரிகள் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது. இதன் காரணமாக மேலும் 893 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் காரியாலயம் தெரிவிப்பு. 
  • ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள காலப்பகுதியில் விசேட சேவைகளுக்காக கொழும்பு மாவட்டத்தில் 62 எரிபொருள் நிரப்பு நிலையங்களும், கம்பஹா மாவட்டத்தில் 68 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் களுத்துறை மாவட்டத்தில் 27 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு. 
  • கொழும்பு சமுர்த்தி திணைக்களத்தில் சேவையாற்றிய பெண் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அதிகாரியின் கணவர் பேலியகொட மீன் சந்தையில் சேவையாற்றியவர் என தெரிவிக்கப்பட்டது. 
  • குருநாகல் நகர சபை ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து குருணாகல், வில்கொட கிராமம் தனிமைப் படுத்தப்பட்டது. 
  • ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் கொழும்பிலுள்ள முன்னணி ஹோட்டலில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனின் திருமணம் இன்று (30) நடைபெற்றது. பின்னர் போலீசார் தலையிட்டு அதை நிறுத்தினர். 
  • இன்று (30) காலை வரையான நிலவரப்படி இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தை தவிர ஏனைய 24 மாவட்டங்களிலும் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிப்பு. 
  • PCR பரிசோதனை என்ற போர்வையில் வீடொன்றுக்கு போலி PHI குழுவினர் வருகை தந்து தங்க நகையை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் சம்பவம் நேற்று (29) மாலை மஹவ பிரதேசத்தில் பதிவாகியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. 
  • கொரோனா தொற்றினை அறிந்து கொள்ள மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கான தரமான கருவிகள் நாட்டில் இல்லாத நிலையில் கொரோனா தொற்றினை சிறந்த முறையில் கட்டுப்படுத்திய ஏனைய நாடுகளிடம் அரசாங்கம் ஏன் உதவி பெறவில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். 
  • இன்றைய தினம் 633 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 30-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 30-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.