திவுலபிடிய கொரோனா எதிரொலி: 01-11-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 28ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக அலுவலக அடையாள அட்டைகளை பயன்படுத்தக்கூடிய 80 நிறுவனங்கள் பதில் காவற்துறை மா அதிபரால் அறிவிப்பு. 
  • மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி காலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் எஹலியகொடை பொலிஸ் பிரிவு, குருணாகலை நகர சபை பிரிவு மற்றும் குளியாபிடிய பொலிஸ் பிரிவிற்கு நாளை காலை 05 மணி முதல் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி காலை 05.00 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு. இதேவேளை, 011 7966366 என்ற இலக்கத்திற்கு அழைத்து கொவிட் நோய் தொடர்பில் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். 

  • பொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தவிர மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  • கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக 2020 நவம்பர் மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. 
  • பங்குச் சந்தையின் அனைத்து வித செயற்பாடுகளும் நாளை திங்கட் கிழமை (02) முதல் வழமைக்கு திரும்புவதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. 
  • கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கையானது 125ஆக அதிகரிப்பு. 
  • கொழும்பு-புறக்கோட்டை மெனிங் சந்தையானது மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மெனிங் வியாபாரிகள் சங்கம் தெரிவிப்பு. 
  • கொழும்பு-புதுகடை நீதிமன்ற வளாக பகுதிக்கு கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. 
  • வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனையை 10 ஆவது நாளில் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கினார். 
  • தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி நுவரெலியா பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்றுள்ள 15 நபர்களை அவர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றும் துணை ஊழியர் ஒருவருக்கு நேற்றைய தினம் கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற திட்டங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டுமென ஐக்கி தேசி கட்சி தெரிவிப்பு. 
  • நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களில் 90 வீதமானவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் மருத்துவர் சஞ்ஜீவ முனசிங்க தெரிவிப்பு. 
  • கொவிட் 19 தொற்றால் நாட்டில் 21 ஆவது மரணம் சம்பவித்துள்ளது. வெலிசர மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 40 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. 
  • இன்றைய தினம் 397 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 01-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 01-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 04, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.